Lalitha

@srimathrenamaha

தேவி ! இது உன்னாலேயே பாலிக்கப்படுகிறது. முடிவில் நீயே இதை உண்டுவிடுகிறாய். சிருஷ்டியில் உத்பத்திவடிவாகவும், பாலனத்தில் ஸ்திதிவடிவாகவும் உள்ளவள் நீயே!
Posts
1,801
Followers
20.8k
Following
600
#அபிராமியந்தாதி பாடல் ; 58 அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக் கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும், சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே 💚
660 6
7 months ago
#அபிராமியந்தாதி பாடல் ; 41 புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக் கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப் பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே 💚
756 7
8 months ago
Trip 2: Sirukarumbur Sundarakamakshi temple
330 3
8 months ago
ஆதா⁴ராதி³ ஸமஸ்த சக்ர நிலயாம் ஆத்³யந்த ஶூந்யாம் உமாம் ஆகாஶாதி³ ஸமஸ்தபூ⁴த நிவஹா காராம் அஶேஷாத்மிகாம் । யோகீ³ந்த்³ரைரபி யோகி³நீ ஶத க³ணைர் ஆராதி⁴தாம் அம்பி³காம் காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சீபுரீதே³வதாம் ॥ மாசி பூரம் ..... ஶ்ரீ காமாக்ஷி பராபட்டாரிகா ஆவிர்பாவம் ...
496 2
1 month ago
அபயாம்பிகை சதகம் பாடல் : 32 கனத்த மலையை எடுத்தணுவாய்க்‌ காலால்‌ ஊன்றி மீதுவைத்தால்‌ கால்தான்‌ தாங்க வசமாமோ கருணா நிதியே இனிஉனது சினத்தை மகன்மேற்‌ பொருத்திநின்றால்‌ சிறியேன்‌ பொறுத்து நிலைப்பேனோ சிவையே உனது தயவுவரச்‌ செய்வாய்‌ இனிஅஞ்‌ சுகஇனமே தொனித்த மறையின்‌ முடிவிளக்கே சோதி வதனச்‌ சுடரொளியே சுத்த வியோம மண்டலத்தில்‌ சுகமாய்‌ வளரும்‌ துரந்திரியே மனத்துள்‌ அழுக்கை அகற்றிஉன்றன்‌ மலர்ப்பா தமதில்‌ சேர்த்தருள்வாய்‌ மயிலா புரியில்‌ வளரீசன்‌ வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே. சித்திரத்தில்: பகவதி ஸ்ரீஅம்பா மாதா
135 4
1 month ago
நாமம்: 624 கைவல்ய பததாயினி -- கைவல்யம் எனும் மோக்ஷத்தை அனுக்ரஹிக்கக்கூடியவள். கைவல்யம் என்பது முக்தி நிலையில் இறுதியாம். அந்த கைவல்ய மோக்ஷம் பராசக்தியான அனுக்ரஹத்தால் மட்டுமே ஏற்படும் சித்திரத்தில் : ராஜபாளையம் ஸ்ரீமூகாம்பிகை
382 4
1 month ago
அபயாம்பிகை சதகம் பாடல் : 31 பெரியோர்‌ எவரைப்‌ பழித்தேனோ பிரம தவத்தை அழித்தேனோ பெற்ற தாயார்‌ பசித்திருக்கப்‌ பேணி வயிற்றை வளர்ந்தேனோ அரிய தவத்தோர்க் கிடைஞ்சல்செய்தே அற்ப ரிடத்தில்‌ சேர்ந்தேனோ அறியா மையினால்‌ என்ன குற்றம்‌ ஆர்க்குச்‌ செய்தே னோஅறியேன்‌ கரிய வினைதான்‌ எனதறிவைக்‌ கலங்க வடித்து முடிச்சதையுங்‌ கரைக்க வுன்றன்‌ கருணையினால்‌ கடாக்ஷம்‌ பொருந்த அருள்புரிவாய்‌ வரிவில்‌ புருவ மடமானே வதனாம்‌ புயவா லாம்பிகையே மயிலா புரியில்‌ வளரீசன்‌ வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.. சித்திரத்தில்: கோயம்புத்தூர் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பா
149 3
1 month ago
நாமம்: 622 குஹ்யா -- மிகவும் ரகசியமானவள். அம்பிகை மிகவும் ரஹஸ்யமானவள். அவளை உணர்வது கடினம். அவளே ப்ரஹ்மவித்யை சித்திரத்தில்: கட்டக் ஸ்ரீகடகசண்டி தேவி
91 2
1 month ago
அபயாம்பிகை சதகம் பாடல் : 30 கள்ள மயக்கந்‌ தொடராமல்‌ கவலைப்‌ பிணிகள்‌ அடராமல்‌ கனவை நனவாய்‌ தொடர்ந்தடர்ந்து கரைய விழியின்‌ புனலாறாய்த்‌ துள்ளி மனந்தான்‌ மிகச்‌ சலனந்‌ தொடுத்துத்‌ தொடுத்தே அலையாமல்‌ சுகமாய்‌ உன்றன்‌ இருபதத்தை தொண்டன்‌ மனத்துட்கொண்டருள்வாய்‌ உள்ளபடியே மனத்தடத்தில்‌ ஒன்றாய்‌ வாழுங்‌ கனியமுதே ஓங்கா ரத்துக்‌ குள்ளிருந்தே உயர்ந்த கமலா சனத்தரசே வள்ளல்‌ இடத்தி அருள்மயத்தி வனச முகத்தி கனகசத்தி மயிலா புரியில்‌ வளரீசன்‌ வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே. சித்திரத்தில்: மஹாராஜபுரம் ஸ்ரீதுர்காம்பிகை
173 1
1 month ago
நாமம்: 621 கேவலா -- தனித்தவள். தன்னைத் தவிர வேறொன்று இல்லாதவள். பரப்ரஹ்மம் சித்திரத்தில்: ஆரூர் கமலைப்பராசக்தி
717 5
1 month ago
நாமம்: 620 க்லீங்காரி -- க்லீம் எனும் பீஜாக்ஷர மஹாமந்த்ரத்தின் வடிவானவள். க்லீம் என்பது காமராஜ பீஜம். அதன் அதிஷ்டான மூரத்தியானவள் அம்பிகை சித்திரத்தில்: சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன்.
791 6
1 month ago
அபயாம்பிகை சதகம் பாடல் : 29 ஏன்றான்‌ மயக்கத்‌ திருவினையும்‌ மிடியும்‌ வகையும்‌ போதாதோ ஏழை தனையே பகைப்பவர்கள்‌ இருமா நிலத்திற்‌ சலுகையுண்டாய்‌ நான்றான்‌ பெரியன்‌ என்றுரைத்த நாவும்‌ வாயும்‌ அடைத்தெமனார்‌ நகரிற்‌ பயண மாகிவர நடத்தாய்‌ கருணைச்‌ சுடர்விளக்கே தான்றான்‌ செய்த வினைமுழுதும்‌ தனக்கே யன்றி மனக்கவலை தன்னாற்‌ போமோ என்மனத்துத்‌ தளர்ந்து. புழுங்கும்‌ என்செய்கேன்‌ வான்றான்‌ பரவும்‌ திரிபுரையே மெளனா தீத மலர்க்கொடியே மயிலா புரியில்‌ வளரீசன்‌ வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே. படத்தில் : வேற்காடு ஸ்ரீகருமாரியம்மன் 🥰😇🙏🏻
529 6
2 months ago